Pages

Menu

TET Article: மனிதாபிமானத்தின் மிச்சம் எங்கு உள்ளது?

Friday 8 August 2014

வேதனை தரும் வெயிட்டேஜ் முறை, சரியான நேரத்தில் வழங்கப்படாத சலுகை, திணறும் TRB.

                      தமிழகம் மட்டும் இல்லாமல் வேறு எந்த இந்திய மாநிலங்களிலும், எந்த தேர்வு முறைகளிலும் இல்லாத வெயிட்டேஜ் முறை எதற்கு என்று யாருக்கும் புரியவில்லை. இதனால் பல ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றர்.


 
1. நான் டெட் தேர்வில் 90 மதிப்பெண்ணிற்கு மேல் பெற்று ஜனவரி 2014ல் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு சென்றபோது சான்றிதழ் சரிபார்க்கும் எனது அறையில் 24 சக டெட் தேர்வர்களில் 6 தேர்வர்கள் 1970-லிருந்து 1975 இந்த வருட இடைவெளிகளில் பிறந்தவர்கள். இவர்களின் +2 இளங்கலை, பி.எட் படிப்பு முறைகளும், 1990 – களில், அதற்கு பின்பு பிறந்தவர்களின +2, இளங்கலைபி.எட் படிப்பு முறைகளையும் ஒப்பிட்டு சமமாக கருதி வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்குவது முற்றிலும் மூத்த பட்டதாரிகளை ஏமாற்றும் செயலாகத்தான் தோன்றுகிறது.

2. நான் +2, படிக்கும் போது எங்கள் அரசு பள்ளியில் 1000 மதிப்பெண்கள் தாண்டி ஒரே ஒரு  மாணவர்தான் தேர்ச்சி றெ்றவர். 1-10 மாணவர்கள் தான் 900-1000 மதிப்பெண்ணிற்கு மேல் பெற்று தேர்ச்சி அடைந்தனர். ஆனால் தற்போது இந்த நிலை முற்றிலும் மாறுபட்டுள்ளது. 10 வருடங்களுக்கு முன் படித்த படிப்பிற்கு மதிப்பெண் வழங்குவது ஏற்புடையது தானா?

3. கடந்த 6-லிருந்து 7 வருடங்களாக தான் கல்வியில் மாற்றம், கற்றல் முறையில் மாற்றம், கற்பித்தல் முறையில் மாற்றம், தேர்வு முறைகளில் மாற்றம் என பல மாற்றங்கள் பெற்றுள்ள இந்நிலையில் வெயிட்டேஜ் முறை சற்றும்  ஏற்புடையதாக இல்லை.

4. +2 வில் எல்லா பிரிவுகளுக்கும் ஒரே மாதிரியான பிராக்டிகல் மதிப்பெண் வழங்கப்படுவதில்லை, எனவே தேர்ச்சியில் மாற்றம் ஏற்படுகிறது என்பதை எல்லோரும் ஏற்று கொண்டுத்தான் ஆக வேண்டும்சில தனியார் பள்ளிகளில் +2  மாணவர்களுக்கு செய்முறை வகுப்புகளும், மாதிரி செய்முறை தேர்வுகளும் நடைபெறுவதே இல்லை. இறுதி தேர்வுகளில் மட்டும் அனைவருக்கும் முழு மதிப்பெண்களை நிர்வாகம் பெற்று தருவது  அனைவரும் அறிந்ததே. தனியார் பள்ளி, அரசு பள்ளி மாணவர்களின் மதிப்பெண் விகிதம் எக்காலத்திலும் மாறுபட்ட ஒன்றே.

5. இளங்கலை படிப்பை எடுத்துகொள்வோம் செமஸ்டர் முறை, நான்-செமஸ்டர் முறை இவை இரண்டையும் ஒப்பிட்டாலே தேர்ச்சி விகிதம் மாறுபடும் அல்லவா. பல வருடங்களுக்கு முன் பல்கலைகழகத்தில் படித்த படிப்பும், தற்போது அடானமஸ் கல்லூரிகளில் படித்த படிப்பும் ஒன்றாகுமா?

6. பண வசதி குறைவாக உள்ளவர்கள் கல்லூரி செல்ல முடியாமல் தான் அஞ்சல் வழியில் படித்து பட்டம் பெறுகின்றனர். அவர்களின் நிலை பற்றி ஆசிரியர் தேர்வு வாரியமும் அரசும் உணர வேண்டும். அஞ்சல் வழிக் கல்வியில் தேர்ச்சி பெற்று பி.எட் படித்து டெட் தேர்வில் 90 மதிப்பெண் பெற்றும் பணி வாய்ப்பை இழந்த பலரின் நிலைதான் என்னநாங்கள் படிக்கும் தருணத்தில் இளங்கலை படிப்பு 3 ஆண்டிற்கும் சேர்த்து 15 முதல் 20 பாடப்பிரிவுகள் தான் இருந்தன. ஆனால் தற்போது Ethics, EVS, Skill Development paper  என 30-40 பாடப்பிரிவுகளுக்கும் மதிப்பெண் சதவீதம் வழங்கப்படுவது சரியான ஒன்றாகாது.

7.  நான்-செமஸ்டர், செமஸ்டர்,  அஞ்சல் வழிக்கல்வி - நேரடி கல்வி, அடானமஸ் கல்லூரி - பல்கலைகழகக் கல்வி என பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. பல்வேறு மாவட்டங்கள் பல்வேறு பாடதிட்டம், பல்வேறு பல்கலைகழகம், பல்வேறு தேர்வு முறை என பல்வேறான மாற்றங்கள் உள்ள அமைப்புகளில் படித்த படிப்பை ஒப்பிட்டு வெயிட்டேஜ் வழங்கும் முறை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது.

8. இந்த வெயிட்டேஜ் முறை எவ்வாறு உள்ளது என்றால்:-

               +2, இளங்கலை கல்வி ஆண்டுகளில் குறைந்த மதிப்பெண் சதவீதத்தை கொண்டு பி.எட் படிக்க அனுமதித்த அரசாங்கம், தற்போது அந்த மதிப்பெண்களை கொண்டு வெயிட்டேஜ் கணக்கிடுவதுஒரு உடல்நலம் குறைவான முதிர்கன்னி கருதரித்து மருத்துவமனைக்குச் சென்ற போது பரிசோதித்த மருத்துவர் தொடர்ந்து சிசுவை வளர அனுமதித்து சிசு பிரசவிக்கும் தருணத்தில் உங்கள் கருவில் வளர்வது சிசு அல்ல, உங்களுக்கு தாய்மையடையும் வாய்ப்பு என்றும் இல்லை! என்று கூறுவதுப்போல் இருக்கிறது”,

                எனவே வெவ்வேறு பாடத்திட்டம், காலக்கட்டம், தேர்வுமுறை, கல்வியமைப்பு இவைகளில் படித்த +2 மற்றும் இளங்கலை படிப்பை கணக்கில் கொள்ளாமல் PG TRB, TNPSC, BANK EXAM, IAS  போல அனைவருக்கும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டு அரசால் பொதுவாக வைக்கப்பட்ட டெட் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பணி வழங்குவது தான் மிக மிக சரியான ஒன்று.

சரியான நேரத்தில் வழங்கப்படாத சலுகை:-

                சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் சட்டம் இயற்றியதில் இருந்தே பல பிரிவினருக்கு பல சலுகைகள் வழங்கப்படுவது அனைவரும் அறிந்ததே 

         டெட் தேர்வர்களுக்கு சலுகை வழங்கியது குற்றம் இல்லை என்றாலும் சலுகை முதலில் இருந்து வழங்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது இனி வரும் தேர்வுகளுக்கு பின்பற்ற வேண்டும் அது தான் மனித தருமம். அதேபோன்று 2012 டெட் தேர்வில் 82-89 பெற்றவர்களை மட்டும் வஞ்சிப்பது நியாயமில்லை.

       பாரளுமன்ற தேர்தலின் போது டெட் தேர்வர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்குவது பற்றி சட்டசபை வாயிலில் பேசிய பல தலைவர்களும் டெட் நியமனம் உடனடியாக நடைபெறாதது குறித்து பேசாதது வருத்தம் அளிக்கிறது.

                 தேர்வு  எழுதி சான்றிதழ் சரிபார்த்துவிட்டு பணிக்காக காத்திருக்கும் தருணத்தில் சலுகை வழங்கியது, மற்றும் வெயிட்டேஜ் முறை பின்பற்றுவது எவ்வாறு உள்ளது தெரியுமா?. “10 சுற்று எல்லையாக கொண்ட ஒலிம்பிக் போட்டியில் 1000 மீட்டர் ஓட்ட பந்தய வீரர் 10 சுற்றுகள் ஒடி, முதலில் வந்த வீரன் பதக்கத்தை எதிர்நோக்கும் போது 6 சுற்றுகளே எல்லையாக குறைக்கப்பட்டது, எனவே 6-வது சுற்றின்போது முதலில் வந்தவருக்கு தான் பதக்கம் என்று கூறுவது போல உள்ளது. 6-வது சுற்றில் 4 அல்லது 5 வது இடத்தில் இருந்தவரால் இறுதிச் சுற்றில் முதலில் வர முடியாதா”?

              இதே நிலை நீடித்தால் ஆசிரியர் பயிற்சி படிப்பு சேர்க்கைக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைதான் பி.எட் படிப்பிற்கும் சில வருடங்கள் கழித்து ஏற்படும்.

 தயவு கூர்ந்து என்னுடைய ஒரு கேள்விக்கு யாராவது பதில் கூறுங்கள்:-
  • அரசு ஊழியர்களின் வயது வரம்பு 58 இல்லை 45 தான் என்று அரசாணை கொண்டு வந்து இது அரசின் கொள்கை என்று கூறினால் அனைவரும் ஏற்றுக்கொள்வோமா? 
  • இந்த வினாவை அரசு ஆசிரியர்கள், பிற துறை அரசு ஊழியர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மனித உரிமை அமைப்பினர் அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டுமல்லவா? 
  • எனவே வெயிட்டேஜ் முறையை ரத்து செய்து டெட் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.
திணரும் ஆசிரியர் தேர்வு வாரியம் :-
  • முடிவுகள் வெளியிடுவதில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த திணறல் எதனால் என்று யாருக்கும் புரியவில்லை. எத்தனை முறை தான் தவறான அறிவுப்புகளை வெளியிடுவார்கள் என்று புரியவில்லை. 
  • ஆசிரியர் தேர்வு வாரியம் பற்றி ஒரு ஐயம் எனக்குள், அனைவருக்கும் பொதுவாக அறிவிக்கப்பட்ட  முதுகலை ஆசிரியர் தேர்வில் 30 சதவீதத்திற்கு மேலான பிழைகளும் பிரச்சனைகளும் இருந்த தமிழ் துறைக்கு பணி வழங்கப்பட்டுள்ளது! மற்ற துறை ஆசிரியர்களுக்கு தமிழ் துறை ஆசிரியர்களின் பணி அமர்வு நாளிலிருந்து கணக்கிட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் ஊதியம் வழங்குமா என்ன? ஒரே தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குள் ஏன் இந்த வேறுபாடு? 
  • அரசின் ஆணைப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்படுகிறதா? இல்லை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆலோசனை படி அரசு செயல்படுகிறதா என்று யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லையோ?
         இவற்றில் தான் இவ்வளவு பிரச்சனைகள் என்றால் டெட் தாள்-1 தோவர்களின் நிலை எதிர்காலம் பற்றி நினைத்தாலே நெஞ்சு அடைத்து கொள்கிறது. தாமதமாக வழங்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்.

நெஞ்சில் கனம், கண்களில் ரனம்:-

Ø             72 ஆயிரம் டெட் தேர்வர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுகலை தேர்வர்கள் இவர்களின் ஒட்டு மொத்த பட்டதாரிகளின் வாழ்வும் ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் அரசின் கைகளில் இருக்கின்றது என்பதை உணரவேண்டும்.

Ø             உணவு உண்ணா பகல்கள் எத்தனை?, விழிகள் மூடா இரவுகள் எத்தனை?, புன்னகைக்காத உதடுகள் எத்தனை?, வருந்தாத உறவுகள் எத்தனை? என்று யாராலும் கணக்கிட்டு சொல்ல இயலாது.

Ø             ஆசிரியர் பணி ஒரு அறப்பணி! அதற்கு உன்னையே நீ அர்ப்பணி! என்பது சான்றோர் கூற்று. ஆனால் நாங்கள் எங்களையும் தாண்டி எங்கள்  வாழ்வு, உறவு, உறக்கம், எதிர்காலம் இவை அனைத்தும் அர்ப்பணித்துவிட்டோம்
Ø                வருங்காலம் மாணவர்கள் கையில் என்றால் நிகழ் காலம் என்றுமே ஒரு சரியான ஆசிரியர் கையில் என்பது தான் உலக உண்மை. அப்படிப்பட்ட ஆசிரியர்களை வஞ்சனை செய்யாமல் காப்பது அரசின் கடமை ஆகும். ஒரு மருத்துவர் ஒரு நேரத்தில் ஒரு உயிரைத்தான் காப்பாற்ற முடியும். ஒரு வழக்கறிஞர் ஒரு வழக்கைத்தான் வாதாட முடியும். ஒரு பொறியாளரால் ஒரு கட்டிடத்தைதான் திறம்பட கட்ட முடியும். ஆனால் ஒரு நல்ல ஆசிரியரால் ஒரே நேரத்தில் ஒரு சமூகத்தையே ஒழுங்கு படுத்த முடியும்.

Ø             இந்த மண்ணில் இன்னமும் மனிதாபிமானம் கொஞ்சமாவது மிச்சம் இருக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம், மனிதாபிமானம் காப்பாற்றப்படுமா?.
                                            இப்படிக்கு
டெட் தேர்வை நம்பி தெருவில் நிற்கும் சங்கம்!

Article by Mr. திருமாவளவன் கௌதம்!

7 comments

  1. டெட் மதிப்பெண்களை பணிவழங்க எடுத்துக்கொள்வதே தவறானது. அரசால் வழங்கப்பட்ட தொழிற்கல்வி ( ஆசிரியர் தகுதிக் கல்வி) சான்றிதழ்களை அரசே தகுதி இல்லாதது எனக் கூறினால், அச்சான்று வழங்கிட வேண்டிய அவசியம் என்ன? அல்லது அச்சான்றை தகுதி குறைவானது எனக்கூற வேண்டிய அவசியம் என்ன? அரசால் அங்கீகரித்து வழங்கப்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களின் சான்றுகளுக்கும் சம மரியாதை அளித்து அனைவருக்கும் அவர்களின் பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்குவதே சிறப்புடையாதாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. pathivu mooppu adipadaiga kondal ella patta tharigalukkum 35 or 40 vayathirkku mel than pani kidaikkum. neengal yen pg trb exam thavarana ondru pathivu mooppu adipadiyil poduvathe siranthathu endru vaathada kudathu?

      Delete
    2. விஞ்ஞான முறைப்படி வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட வேண்டும் என்றார்கள். ஆனால் வெயிட்டேஜ் மதிப்பெண் என்ற கான்செப்டே விஞ்ஞான ரீதியாக தவறு.

      Delete
    3. விஞ்ஞான முறைப்படி வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட வேண்டும் என்றார்கள். ஆனால் வெயிட்டேஜ் மதிப்பெண் என்ற கான்செப்டே விஞ்ஞான ரீதியாக தவறு.
      நேரடி நியமனம் என்பது ஒன்று முழுமையான போட்டித் தேர்வு . மற்றொன்று வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு. ஆனால் இதை விடுத்து மூன்றாவது ஒன்றை கண்டு பிடித்ததன் விளைவு தான் இந்த இடியாப்பச் சிக்கல்.

      Delete
  2. old pattern d.t.ed la elarum 80% ku mela mark vaithurukanga....new pattern d.t.ed eduthu padithavangaluku pass aagurathe periya visayam.. athula 70 % thaandurathu atha vida periya visayam.. apadilam pakum pothu tet la 88 ,89 mark eduthavangalam munadi poranga.. intha weightage ah la ipo mudithavangalum pathikirom...

    ReplyDelete
  3. eppa mudichi irunthalum ellarukkum pathipputhan weitage system he thappunuthan solrom ellarume.

    ReplyDelete
  4. SIR REALLY GREAT SIR, SUPER ..

    ACTOR PRAKASHRAJ PANIYIL SOLLA PONAL: CHELLAM NEE EVVALOVU NAAL ENGAE CHELLAM

    IRUNTHAE ? SUPER SIR., I REALLY APPRCIATE UR ARTICLE SORRY TET THERVARGALIN AALTHANTHA

    MANANILAI, GOVERNMENT -IN METHANA POKKU, TRB-IN SEYALPADATHA THANMAI MATTUM

    UNMAI NILAI VERY GOOD GOWTHAM SIR., KEEP IT UP., NEENGAL PEN KODUTHAL INK OOTHA

    MATTEERGAL., BLOOD OOTHI THAN ELUTHUVEERGAL., NEENGAL MATTUMALLA TET CANDIDATES ALL ARE., SAME THINK., ENNATHAN NADAKIRATHU.,

    DEAR TRB OFFICIALS., WELFARE SCHOOLS, MUNICIPALITY SCHOOLS, ADI DRAVIDAR SCHOOLS,

    WHAT IS THE POSITION FOR THAT VACANT LISTANY CREATION POST FOR TAMIL.

    TAMIL POSTING ARE VERY LOW., THIS IS TAMILNADU., OK. U R THINKING IS NOT IN TAMIL.,

    ReplyDelete

Print Friendly

Contact Form


அன்பார்ந்த வாசகர்களே,

தங்கள் விவரத்தை இங்கு தரப்பட்டுள்ள படிவத்தில் நிரப்பவும். இதன் மூலம் நாங்கள் உங்களை எளிதாக தொடர்பு கொள்ளவும், தங்களின் தனிப்பட்ட வினாவிற்கு பதிலளிக்கவும் இயலும்.




Click Here and Entry Your Contact Form Detail.
 

New in TrbTnpsc

Contact Me

Padasalai.Net@gmail.com

Blogger news

Blogroll

Most Reading

Tags