Pages

Menu

பணி அனுபவம் உள்ளவர்களுக்கான நேர்முகத் தேர்வு

Friday 11 October 2013


        படித்து முடித்தப்பிறகு, நாம் முதன்முதலில் சேரும் பணியும், முதன்முதலாக பெறும் சம்பளமும் நமக்கு ஒரு பரவச அனுபவத்தை தருவதாக அமையும். அதேசமயம், ஒரு நிறுவனத்தில் சிலகாலம் அனுபவம் பெற்றபிறகு, அங்கிருந்து, பணி உயர்வு மற்றும் கூடுதல் சம்பளம் உள்ளிட்ட காரணங்களுக்காக நாம் வேறு நிறுவனங்களை நாடிச் செல்கிறோம்.

                ஒரு குறிப்பிட்ட துறையில் பணி அனுபவம் பெற்ற பிறகு, அதுதொடர்பான பிற பணி வாய்ப்பை பெறுவதில் அதிக சிரமங்கள் ஏற்படுவதில்லை. ஆனாலும், அப்பணிக்கான நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டியுள்ளது. எனவே, அப்போது ஒருவர் பின்பற்ற வேண்டிய சில ஆலோசனைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

* முந்தைய பணி அனுபவத்தின் அடிப்படையில், உங்களுக்கான Business card இருக்கலாம். எனவே, நேர்முகத் தேர்வு நடக்கும் அறைக்குள் நுழைந்தவுடன், உங்களின் கார்டை எடுத்து, அனைத்து கமிட்டி உறுப்பினர்களுக்கும் கொடுத்துவிடக்கூடாது.

* அப்படி செய்தால், உங்களின்மேல் ஒரு எதிர்மறை அபிப்ராயம், அவர்களுக்கு உருவாகும். ஏனெனில், ஒரு நிறுவனத்தின் பிரதிநிதியாக, வியாபார நிமித்தம் நீங்கள் அங்கு செல்லவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

* எனவே, கமிட்டி உறுப்பினர்கள் உங்களின் கார்டை கேட்காமல், நீங்களே முன்வந்து அனைவருக்கும் தரும்போது, அதை அவர்கள் பார்க்காமலேயே, உங்களிடமே திருப்பிக் கொடுக்கும் தர்மசங்கடமான நிலை உங்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

* உங்களைப் பற்றிய தகவல், நேர்முகத் தேர்வு கமிட்டி உறுப்பினர்களுக்கு, ஏற்கனவே தெரிய வந்திருக்கும். எனவே, நீங்கள் நேருக்கு நேராக அவர்களை சந்திக்கும் முன்னரே, அவர்களுக்கு நீங்கள் அறிமுகமாகி இருப்பீர்கள்.

* சிலர், நேர்முகத் தேர்வு நடந்துகொண்டிருக்கும்போதோ அல்லது அதன் முடிவிலோ, அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு சீனியரை அறிந்திருந்தால், அவரை எனக்கு நன்றாகத் தெரியும் என்று சொல்வார்கள்.

இதன்மூலம், அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தின்பாலான தனது அறிமுகத்தை, நன்கு வலுப்படுத்திக்கொள்ள முயல்வார்கள். ஆனால், சில சமயங்களில் இது எதிர்மறையாக முடிந்துவிடும். ஏனெனில், சில வேளைகளில், அந்த சீனியருக்கும், கமிட்டி உறுப்பினர்களுக்கும், சரியான புரிந்துணர்வு ஏதுமில்லாமல் இருக்கலாம்.

இதனால், உங்கள் மீதும் எதிர்மறை தாக்கம் உருவாகிவிட வாய்ப்புள்ளது. இதன்மூலம், உங்களுக்கான வாய்ப்பு பறிக்கப்படும் சூழலும் ஏற்படலாம். எனவே, எதையும் யோசித்து செய்வதே நல்லது.

No comments:

Post a Comment

Print Friendly

Contact Form


அன்பார்ந்த வாசகர்களே,

தங்கள் விவரத்தை இங்கு தரப்பட்டுள்ள படிவத்தில் நிரப்பவும். இதன் மூலம் நாங்கள் உங்களை எளிதாக தொடர்பு கொள்ளவும், தங்களின் தனிப்பட்ட வினாவிற்கு பதிலளிக்கவும் இயலும்.




Click Here and Entry Your Contact Form Detail.
 

New in TrbTnpsc

Contact Me

Padasalai.Net@gmail.com

Blogger news

Blogroll

Most Reading

Tags