Pages

Menu

யு.ஜி.சி., அமைப்பின் நிதி அதிகாரம் பறிப்பு?

Friday 11 October 2013


       ராஷ்ட்ரிய உக்தார் சிக்ஷா அபியான் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருப்பதன் மூலமாக, மத்திய மனிவளத்துறை, யு.ஜி.சி., அமைப்பின் நிதி அதிகாரத்தை பறிப்பதற்கான சாத்தியங்கள் தொடங்கியுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


         நாட்டின் உயர்கல்வி அமைப்பை மேம்படுத்தி தரப்படுத்துவதற்காக ரூ.22 ஆயிரம் கோடி மதிப்பில் Rashtriya Uchchtar Shiksha Abhiyan (RUSA) திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

            இதனடிப்படையில், கடந்த 2005ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட செயல்திட்டத்திற்கு புத்துயிர் அளிக்க மத்திய மனிதவள அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த செயல்திட்டமானது, யு.ஜி.சி., அமைப்பை ஒரு முழுமையான நெறிமுறைப்படுத்தும் அமைப்பாக மட்டுமே உருவாக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டதாகும். இதன்படி, University Grants Commission என்ற பெயர் Higher Education Council என்று மாற்றப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், UGC என்ற பெயர், நிதியை பகிர்ந்தளிக்கும் அமைப்பாக அதை அடையாளப்படுத்துவதாக உள்ளதே முக்கிய காரணம். பெயர் மாற்றம் பெற்ற அந்த உயர்கல்வி அமைப்பிற்கு, இனிமேல் நிதியை கையாளும் அதிகாரம் இருக்காது.

               இந்த அதிகாரத்தை பறிப்பதன் மூலமாக, UGC, ஒரு தூய்மையான உயர்கல்வி நெறிப்படுத்தும் அமைப்பாக செயல்பட்டு, உயர்கல்வி நிறுவனங்களை தொடர்ச்சியாக ஆய்வுசெய்தல் மற்றும் தணிக்கை செய்தல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு, உயர்கல்வி விதிமுறைகள் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த மற்றும் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு பட்டம் வழங்கும் அதிகாரம் UGC -க்கு இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள RUSA என்ற அமைப்பு, மாநில பல்கலைகளுக்கான நிதி மெக்கானிசமாக செயல்படுகிறது. இந்தப் புதிய அமைப்பு, யு.ஜி.சி., அமைப்பின் நிதிப் பகிர்மான அதிகாரத்தை மட்டுப்படுத்தும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில், மத்திய அளவிலான பல்கலைகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைகள் மற்றும் மாநிலப் பல்கலைகள் ஆகியவைகளுக்கு ஆண்டிற்கு சுமார் 6000 கோடி அளவிலான நிதியை யு.ஜி.சி., ஒதுக்கி வருகிறது.

இனிமேல், RUSA அமைப்பிடமிருந்து தமக்கான நிதியைப் பெற வேண்டுமெனில், மாநில பல்கலைகள், மாநில உயர்கல்வி கவுன்சில், accreditation agencies ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். மேலும், தெளிவான திட்டமுறைகளை தயாரித்து, நிதியை அகடமிக் நோக்கங்கள், கல்வி நிறுவனத்தின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் காலியாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் போன்ற நடவடிக்கைகளில் திருப்புதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Print Friendly

Contact Form


அன்பார்ந்த வாசகர்களே,

தங்கள் விவரத்தை இங்கு தரப்பட்டுள்ள படிவத்தில் நிரப்பவும். இதன் மூலம் நாங்கள் உங்களை எளிதாக தொடர்பு கொள்ளவும், தங்களின் தனிப்பட்ட வினாவிற்கு பதிலளிக்கவும் இயலும்.




Click Here and Entry Your Contact Form Detail.
 

New in TrbTnpsc

Contact Me

Padasalai.Net@gmail.com

Blogger news

Blogroll

Most Reading

Tags